மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைக் கூடங்களில் கண்டறியப்படாமல் பரவிக் கொண்டிருக்கும் கடுமையான தொற்று அல்லது மரணத்தைக் கூட விளைவிக்கக்கூடிய, அனைத்து அறியப்பட்ட நோயெதிர்ப்பு மருந்துகளையும் எதிர்க்கும் தன்மை கொண்ட ‘சூப்பர்பக்’ என்றழைக்கப்படுகின்ற நோய்க்கிருமியை கண்டுபிடித்துள்ளார்கள்.
அவர்கள், 10 நாடுகளிலிருந்து ஸ்டாபைலோ கோக்கஸ் எபிடெர்மிஸ் (Staphylococcus epidermidis) என்றறியப்படும் பாக்டீரியாவில் மூன்று வகையான பல்வகை மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட நோய்க்கிருமியை கண்டறிந்துள்ளனர்.