TNPSC Thervupettagam

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கான மேம்படுத்தப்பட்ட உற்பத்தி நடைமுறைகள்

January 14 , 2024 188 days 154 0
  • மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது, ஜனவரி 06 ஆம் தேதியன்று 1945 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகளின் கீழான M அட்டவணையின் கீழ் திருத்தப் பட்ட விதிகளை அறிவித்துள்ளது.
  • இது மருந்து மற்றும் உயிரி மருந்து தயாரிப்புகளுக்கு வலுவான தரக் கட்டுப்பாட்டினை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அட்டவணை M ஆனது மருந்துப் பொருட்களுக்கான தரமான உற்பத்தி நடைமுறைகளை (GMP) நிர்ணயிக்கிறது.
  • திருத்தப்பட்ட M அட்டவணை ஆனது GMP கடைபிடிக்கப் படுவதையும், மருந்துப் பொருட்கள் உற்பத்திக்கான உற்பத்தி வளாகம், ஆலை மற்றும் உபகரணத் தேவைகளையும் உறுதி செய்வதற்கான விதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • GMP ஆனது முதன்முதலில் 1945 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளின் M அட்டவணையில் 1988 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டதோடு இதில் கடைசியாக 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருத்தம் ஒன்றும் மேற் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்