TNPSC Thervupettagam

மர்மமான பழுப்பு நிறக் குறு விண்மீன்கள்

October 22 , 2024 4 days 43 0
  • 1995 ஆம் ஆண்டில், பூமியிலிருந்து சுமார் 19 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து உள்ள கிலியீஸ் 229 எனப்படும் ஒரு செந்நிறக் குள்ள நட்சத்திரத்தினை (குறு விண்மீன்) சுற்றி வரும் பழுப்பு நிறக் குள்ளக் கோளினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
  • கிலியீஸ் 229B எனப்படுகின்ற இந்தப் பழுப்பு நிறக் குள்ள நட்சத்திரமானது அதிக நிறை மிக்கதாக இருந்தாலும் மங்கலாக தென்பட்டது.
  • அதன் நிறையானது சுமார் 70 வியாழன் கோளின் நிறைக்குச் சமமாகும் என்பதோடு தொலைநோக்கி மூலம் பதிவு செய்யப்பட்டதை விட அது பிரகாசமாக இருந்திருக்க வேண்டும்.
  • கிலியீஸ் 229B ஆனது ஒரு இரட்டை விண்மீனாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் சந்தேகிக்கித்தனர்.
  • மிகச் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கிலியீஸ் 229B ஆனது வியாழனின் நிறையில் 38 மற்றும் 34 மடங்கு நிறை கொண்ட இரண்டு பழுப்பு நிறக் குள்ள நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது (கிலியீஸ் 229 Ba மற்றும் கிலியீஸ் 229 Bb).
  • அவை 12 நாட்கள் மற்றும் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 16 மடங்கு இடைவெளியுடன் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன.
  • பதிவு செய்யப்பட்ட இப்பிரகாச அளவுகள் ஆனது, இந்த நிறை அளவு வரம்பில் உள்ள இரண்டு சிறிய பழுப்பு நிறக் குள்ளக் கோள்களுக்கான எதிர்பார்க்கப்படும் பிரகாச அளவுகளுடன் பொருந்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்