ஐரோப்பிய சட்டத்தின் கீழ் ‘மறக்கப்படுவதற்கான உரிமை’ என்று அழைக்கப்படும் நிகழ்நேர (ஆன்லைன்) தனியுரிமை விதியானது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் எல்லைகளுக்கு அப்பால் பொருந்தாது என்று ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice - ECJ) தீர்ப்பளித்துள்ளது.
இணையத்தின் மீதான ‘மறக்கப்படுவதற்கான உரிமையானது’ தங்களின் தனிப்பட்டத் தரவுகளை நீக்குமாறு நிறுவனங்களிடம் கேட்க “தனி நபர்களுக்கு” அதிகாரம் அளிக்கின்றது.
இது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தினால் வழங்கப்படுகின்றது. இது 2018 ஆம் ஆண்டில் 28 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிறைவேற்றப்பட்டது.
செயல்பாடு
கூகுள் போன்ற ஒரு தேடு பொறி நிறுவனம், தனியுரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை நீக்குமாறு பயனர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெறுகின்றது.
இது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நாடு சார்ந்த இணைய இணைப்புகளை முதலில் மதிப்பாய்வு செய்து, பின்னர் அவற்றை நீக்குகின்றது.