14-வது நிதிக் குழுவின் மீதமுள்ள பணிக் காலத்திற்கு (2018-20) பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவையானது (Cabinet Committee on Economic Affairs-CCEA) மறுசீரமைக்கப்பட்ட தேசிய மூங்கில் திட்டத்தை (restructured National Bamboo Mission -NBM) அனுமதித்துள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட தேசிய மூங்கில் திட்டமானது நீடித்த வேளாண்மைக்கான தேசிய திட்டத்தின் (National Mission for Sustainable Agriculture-NMSA) கீழ் செயல்படும் ஓர் மத்திய நிதியுதவி திட்டமாகும் (Centrally Sponsored Scheme).
தேசிய மூங்கில் திட்டத்திற்கு வழிகாட்டுதல்களை வகுப்பதற்கும், திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கும் நிர்வாகிகள் குழுவின் (Empowerment of Executive Committee) அதிகாரமளிப்பிற்கும் (Empowerment of Executive Committee) பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவையானது அனுமதி வழங்கியுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட தேசிய மூங்கில் திட்டமானது ஒருசில மாநிலங்களில் அதாவது எந்தெந்தப் பகுதிகளில் மூங்கில்கள் சமூக, வர்த்தக மற்றும் பொருளாதார நன்மைகளைக் (social, commercial and economical advantage) கொண்டுள்ளனவோ அந்த வரம்புக்குட்பட்ட மாநிலங்களின் மூங்கில் துறையின் மேம்பாட்டின் மீது கவனம் செலுத்தும்.
இதன்படி மறு சீரமைக்கப்பட்ட தேசிய மூங்கில் வளர்ச்சித் திட்டமானது குறிப்பாக வட கிழக்கு மாநிலங்கள் மீதும், தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், தெலுங்கானா, பீகார், ஜார்கண்ட், ஓடிஸா போன்ற மாநிலங்கள் மீதும் கவனம் செலுத்தும்.
மத்திய நிதியுதவித் திட்டமான தேசிய மூங்கில் திட்டம் 2006-2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2014-2015 ஆண்டு காலத்தில் தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கான திட்டத்தின் (Mission for Integrated Development of Horticulture-MIDH) கீழான ஒன்றாக இது செயல்படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம் 2015-16 வரை தொடரப்பட்டது.
பகுதிகள் அடிப்படையிலான பிராந்திய அளவில் வேறுபட்ட உத்திகள் (area based regionally differentiated strategy) மூலம் நாட்டில் மூங்கில் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.