TNPSC Thervupettagam

மறுசீரமைப்பிற்கான பன்முகத்தன்மை (D4R) செயற்கருவி

July 8 , 2023 510 days 298 0
  • பயோவர்சிட்டி இன்டர்நேஷன் என்ற அமைப்பானது, மறுசீரமைப்பிற்கான பன்முகத் தன்மை (D4R) என்ற இயங்கலைச் செயற்கருவியினை உருவாக்கியுள்ளது.
  • இந்த இயங்கலைத் தளமானது, சிறந்த முடிவுகளை மேற்கொள்வதற்கு உதவுவதையும், தோட்டப் பகுதிகளை உருவாக்கும் திட்டங்களின் மூலம் சிறந்த ஒரு பலனைப் பெறச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சமூக-சுற்றுச்சூழல் சார்ந்தக் கருத்துகளை மேம்படுத்தி முடிவெடுக்கும் செயல் முறையில் பங்குதாரர்களுக்கு உதவும்.
  • இந்தத் தளத்தில் சிறந்தத் தீர்வை வழங்குவதாகக் கருதப்படுகின்ற 100 தாவரச் செயல் பாட்டுப் பண்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன.
  • இந்த மர இனங்கள் மரம், பழம், உரம் அல்லது பிற வணிகப் பயன்களை வழங்குகின்றனவா என்பதை இந்தச் செயற்கருவி பயனருக்குத் தெரிவிக்கிறது.
  • அதீத உயர் அல்லது குறைந்த வெப்பநிலை, உப்புத்தன்மை அல்லது மண்ணின் அமிலத் தன்மைக்கான சகிப்புத் திறன் போன்ற அமைப்பு சார்ந்த அழுத்தங்களுக்கு மர வகைகள் தாக்குப் பிடிக்கக் கூடியதா என்பதையும் இது தெரிவிக்கிறது.
  • இது போன்ற ஒரு தளமானது, ஏற்கனவே மலேசியா, எத்தியோப்பியா, கொலம்பியா, பெரு, புர்கினா பாசோ, கேமரூன் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்