TNPSC Thervupettagam

மறைகுறியாக்கப்பட்ட சமூக ஊடகச் செய்திகளுக்கு எதிரான பிரச்சாரம்

October 23 , 2020 1405 days 555 0
  • இந்தியா மற்றும் இதர 7 நாடுகள் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரையில் மறைகுறியிடப்பட்(end-to-end encryption) சமூக ஊடகச் செய்திகளுக்கு எதிரான ஐக்கிய இராஜ்ஜியத்தின் தலைமையிலான பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது முகநூல் போன்ற சமூக ஊடகங்களினால் அனுப்பப்படும் மறைகுறியாக்கப் பட்ட செய்திகளுக்கு எதிராக மேற்கொள்ளப் படுகின்றது.
  • ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் இந்தியா ஆகியவை கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் இணைந்துள்ளன.
  • இந்த நடவடிக்கையானது ஜப்பான் மற்றும் இந்தியாவை இணைப்பதற்காக நுண்ணறிவுப் பிரச்சினைகள் குறித்த உலகளாவியக் கூட்டிணைவான “5 கண்கள்என்ற பெயரில் 5 நாடுகளைக் கொண்ட ஒரு குழுவின் விரிவாக்கத்தைக் குறிக்கின்றது.
  • ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரையிலான மறைகுறியாக்கம் என்பது தகவல் தொடர்பில் உள்ள பயனாளர்கள் மட்டுமே இந்த செய்திகளைப் படிக்கக் கூடிய ஒரு தகவல் தொடர்பு அமைப்பாகும்.
  • இது தகவல்தொடர்பு வழங்குநர்கள், இணையச் சேவை வழங்குநர்கள் மற்றும் தொடர்புச் சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட சாத்தியமான இடையீட்டாளர்களைச் செய்தி தொடர்பில் தலையிடுவதில் இருந்து தடுக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்