மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் V.O. சிதம்பரனார், மறைந்த சமூக சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மற்றும் மறைந்த மருத்துவர்-சட்டமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் சிலைகளைத் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
V.O. சிதம்பரனார் அவர்களின் சிலையானது கோவையில் உள்ள V.O.C. பூங்காவில் நிறுவப் பட்டுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் சிலை மயிலாடுதுறையில் நிறுவப் பட்டுள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சிலையானது புதுக்கோட்டையில் நிறுவப் பட்டுள்ளது.
மேலும் அவர், மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வர் P.சுப்பராயன் அவர்களின் நினைவு மண்டபத்தினைக் கட்டமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.