TNPSC Thervupettagam

மறைந்த மு.கருணாநிதி அவர்களுக்கு நினைவிடம்

August 26 , 2021 1247 days 542 0
  • மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி அவர்களுக்குச் சென்னை காமராஜர் சாலையிலுள்ள மெரினாவில் ஒரு நினைவிடம்  அமைக்கப் பட உள்ளது.
  • ஒரு நவீன தமிழகத்தை உருவாக்குவதில் அவர் ஆற்றிய முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த நினைவிடமானது அமைக்கப்பட உள்ளது.
  • தமிழக சட்டசபையின் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
  • 110வது விதியின் கீழ், எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றக் கூடிய வகையில் ஒரு தீர்மானத்தினைச் சட்டசபையில் அறிவிக்கவோ அல்லது கொண்டு வரவோ முதலமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்