ஐஎன்எஸ் சஹ்யாத்ரி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய கப்பல்கள் ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் நடைபெறுகின்ற மலபார் 2023 பயிற்சியில் பங்கேற்கின்றன.
இந்தியக் கடற்படை, அமெரிக்கக் கடற்படை (USN), ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை (JMSDF) மற்றும் ஆஸ்திரேலியக் கடற்படை (RAN) ஆகியவை இந்த போர்ப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
இந்த மலபார் தொடர் கடல் பயிற்சியானது, இந்தியக் கடற்படைக்கும் அமெரிக்கக் கடற் படைக்கும் இடையிலான ஒரு இரு தரப்புப் பயிற்சியாக 1992 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
2020 ஆம் ஆண்டு பயிற்சியில் ஆஸ்திரேலியக் கடற்படையானது (RAN) முதல்முறையாக பங்கேற்றது.
இந்த ஆண்டின் பயிற்சியானது, 27வது மலபார் கடற் பயிற்சியினைக் குறிப்பதோடு இது ஆஸ்திரேலியக் கடற்படையினால் (RAN) நடத்தப் படுகிறது.