2023 ஆம் ஆண்டு மலபார் பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு மலபார் பயிற்சியினை ஆஸ்திரேலியா நடத்த உள்ளது.
2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற மலபார் பயிற்சியில், ஆஸ்திரேலியா அதன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது.
ஜப்பான் 2015 ஆம் ஆண்டில் இந்தக் கடற்படைப் பயிற்சியில் சேர்ந்தது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இதற்கு முந்தைய மலபார் பயிற்சியினை ஜப்பான் நடத்தியது.
2022 ஆம் ஆண்டு மலபார் பயிற்சியானது, 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்புப் பயிற்சியாகத் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சியின் 30 ஆண்டுகள் நிறைவினைக் குறிக்கிறது.