TNPSC Thervupettagam

மலபார் போர் பயிற்சி 2018

June 6 , 2018 2368 days 696 0
  • அமெரிக்கா இந்தியா, ஜப்பான் ஆகியவற்றிற்கிடையேயான மலபார் எனும் முத்தரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சி பிலிப்பைன்ஸ் கடலில் உள்ள குவாம் தீவின் கடற்கரையில் நடைபெற்றுள்ளது.
  • இப்போர் பயிற்சியானது மலபார் போர் பயிற்சியின் 22-வது பதிப்பாகும்.
  • இந்த வருடாந்திர கடற்படைக் கூட்டுப் போர் பயிற்சியின் 22-வது பதிப்பின் நோக்கம் கடற்படைகளிடையே இணைந்து செயலாற்றும் தன்மையை அதிகரிக்கவும், கடற்பாதுகாப்பில் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாகும்.
  • மலபார் கடற்படைக் கூட்டுப் போர் பயிற்சியானது இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு கூட்டுப் பயிற்சியாக 1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பின் இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டது.
  • பின்பு 2015 ஆம் ஆண்டு ஜப்பான் முறையாக இந்தக் கூட்டுப் போர் பயிற்சியில் நிரந்தர பங்களிப்பாளராக இணைந்தது. இதன் மூலம் முத்தரப்பு கூட்டுப் போர் பயிற்சியாக மலபார் கூட்டுப் பயிற்சி உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்