TNPSC Thervupettagam

மலாசிடின்ஸ் –புதிய ஆன்டிபயாடிக்

February 19 , 2018 2342 days 715 0
  • மாலாசிடின்ஸ் (Malacidins) எனும் புதிய ஆன்டிபயாடிக் வகுப்பை கண்டுபிடித்திருப்பதாக நியூயார்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • பல்வேறு மண் வகைகளில் இருக்கின்ற மூலக்கூறுகளிலிருந்து இந்த புதிய ஆன்டிபயாடிக் வகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • மண் மற்றும் மாசுக்களில் வாழும் நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆன்டிபயாடிக் ஆனது பல்வேறு நோய் எதிர்ப்புத் திறனுடைய நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் வாய்ந்தது.
  • பிளேக், நிமோனியா, காலரா போன்றவற்றை ஏற்படுத்தும் கிராம் நெகடிவ் பாக்டீரியாக்களுக்கு எதிராக இவை செயல்தன்மையற்றவை.
  • மிகவும் தடித்த செல் சுவருடைய கிராம் பாசிடிவ் பாக்டீரியாக்களை மட்டுமே இவை எதிர்க்கவல்லன.
  • மாலாசிடின் தனித்துவ ஆன்டிபயாடிக் வகையாகும். இவை பொதுவாக மண் நுண் உயிர்க்கட்டுகளில் (Soil Micro biomes) குறியீட்டாக்கம் (Encode) செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்