மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் பணியாற்றிய அமைச்சர்களில் ஒருவரான S.சாமிவேலு அவர்கள் சமீபத்தில் காலமானார்.
அவர் பாரிசான் நேசனலின் முக்கிய அங்கமான மலேசிய இந்திய காங்கிரஸ் அமைப்பின் தலைவராக 2010 ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் காலத்திற்குப் பணியாற்றிச் சாதனை படைத்தார்.
இவர் 1959 ஆம் ஆண்டில் கட்சியில் சேர்ந்த பிறகு பல தசாப்தங்களாக மலேசியாவின் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்.