திரு.மஹதிர் முகம்மது அவர்கள், மலேசியாவின் ஏழாவது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றி பெற்று இவர் ஆட்சியமைத்துள்ளார்.
92-வது வயதில் மீண்டும் அரசியலுக்கு பிரவேசம் செய்யும் மலேசிய நாட்டு அரசியல் தலைவர் இவர் ஆவார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமராக உருவெடுத்துள்ளார்.
1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்றதிலிருந்து மலேசியாவை ஆண்டு வரும் பரிசன் நேஷனல் கட்சி 79 இடங்களை பெற்றது. இதற்கு முன்னர் இக்கட்சி 133 இடங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பரிசன் நேஷனல் கூட்டணியை முகம்மது இவ்வெற்றியின் மூலம் வென்றுள்ளார்.
மஹதிர் தலைமையிலான எதிர்க்கட்சியான பகாடான் ஹரப்பன், ஒரு சிறிய கூட்டணிக் கட்சியுடன் இணைந்து 121 பாராளுமன்ற இடங்களை வென்றது. மலேசியாவில் அரசமைப்பதற்கு 112 இடங்கள் தேவையாகும்.