மலேசியாவின் 17வது மன்னராக தெற்கு ஜோகூர் மாகாணத்தினைச் சேர்ந்த பில்லியனர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பதவியேற்றுள்ளார்.
இவர் பஹாங் மாகாணத்தின் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவிடம் இருந்து ஆட்சியைப் பெற்றுள்ளார்.
தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தின் முடிவில் தனது பூர்வீக மாகாணமான பஹாங் மாகாணத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்க உள்ள அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவுக்கு அடுத்த படியாக இவர் பதவியேற்றுள்ளார்.
நிர்வாக அதிகாரம் ஆனது பிரதமரிடமும், பாராளுமன்றத்திடமும் வழங்கப்படுவதால், மலேசியாவின் மன்னர் பெருமளவில் பெயரளவுத் தலைமைப் பொறுப்பினையே வகிக்கிறார்.
அரசு மற்றும் ஆயுதப் படைகளின் பெயரளவிலான தலைவராக மன்னர் இருக்கிறார். என்பதோடு இஸ்லாமியம் மற்றும் மலாய் பாரம்பரியத்தின் பாதுகாவலராகவும் அவர் கருதப்படுகிறார்.