இந்திய மின்சக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஆற்றல் சேமிப்பு சேவைகள் நிறுவனம் மலேசியாவின் மேலகா மாநிலத்தில் உஜாலா (UJALA - Unnat Jyoti by Affordable Lighting for All) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இதன் வெற்றியையடுத்து உலகின் பல்வேறு நாடுகள் இதனை தங்கள் நாடுகளில் அமல்படுத்த கேட்கின்றன. இது தற்பொழுது மலேசியாவின் மேலகா மாநிலத்தின் உள்ள மக்களுக்கு பயன்தரக் கூடிய விதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. உஜாலா திட்டம் அறிமுகமான நாள்: மே 1, 2015 “மின்சாரச் சிக்கனத்திற்கான மின் விளக்குகள் திட்டம்” என்ற பெயரில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
வெண்சுடர் விளக்குகள், குழல் விளக்குகள் மற்றும் சி.எப்.எல் (CFL) விளக்குகளுக்கு பதிலாக எல்.ஈ.டி (LED) விளக்குகளின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதற்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. எல்.ஈ.டி விளக்குகள் இதர மின்சார விளக்குகளை விட நீடித்து உழைப்பதுடன், நீடித்து உழைப்பதும் விலை குறைவானதும் ஆகும்.