TNPSC Thervupettagam

மலேசியாவில் முதலாவது போலியோ பாதிப்பு

December 11 , 2019 1718 days 618 0
  • மலேசியாவில் மூன்று மாத கைக் குழந்தைக்கு போலியோ இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 27 ஆண்டுகளில் மலேசியாவில் முதன்முறையாக போலியோ நோய் பாதிப்பு தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
  • மலேசியாவில் கடைசியாக போலியோ நோய் பாதிப்பானது 1992 ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நாடு போலியோ இல்லாததாக அறிவிக்கப்பட்டது. இந்த சமீபத்திய நோய் பாதிப்பில், குழந்தைக்குத்  தடுப்பு மருந்தின் மூலம் பெறப்பட்ட போலியோ வைரஸ் வகை 1 (vaccine-derived poliovirus Type 1 - VDPV1) தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
  • VDPV1 என்பது ஒரு சுழற்சி தடுப்பு மருந்தின் மூலம் பெறப்பட்ட போலியோ வைரஸ் (cVDPV - Circulating Vaccine-Derived Poliovirus) வகை 1 என வகைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்