2015-2021 ஆம் ஆண்டுகளில்மலேரியா ஒழிப்பில் தமிழகத்தின் சிறப்பான செயல்திறன் மற்றும் இரண்டாவது நிலையிலிருந்து முதல் நிலைக்கு தமிழகம் முன்னேறியுள்ளமை ஆகியவற்றை அங்கீகரித்து, தேசிய நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டுமையம் ஒரு சான்றிதழைவழங்கியது.
இரண்டாம் நிலை என்பது மலேரியா அற்ற நிலைக்குமுந்தையக்கட்டத்தையும், முதல் நிலையானது மலேரியா அற்றஒரு கட்டத்தையும் குறிக்கிறது.
2030 ஆம்ஆண்டிற்குள்மலேரியாவை ஒழிக்க வேண்டும் என்று இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் 2024 ஆம்ஆண்டிற்குள்மலேரியாவை ஒழிப்பதற்குதமிழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
38 மாவட்டங்களுள், 31 மாவட்டங்களில் பூஜ்ஜிய அளவு பாதிப்புகளே பதிவாகியுள்ளது.