தமிழ்நாடு மாநில அரசானது, மலைப் பகுதிகள் உள்பட நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருக்கும் அனுமதி பெறாத வாழ்விடங்கள் (அல்லது அமைவிடங்கள்) மற்றும் மனைகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசானது மலைப் பகுதிகளில் உள்ள அனுமதி பெறாத வாழ்விடங்கள் மற்றும் மனைகள் ஆகியவற்றுக்கான தமிழ்நாடு ஒழுங்குமுறை என்ற ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் (HACA - Hill Area Conservation Authority) கட்டுப்பாட்டில் வரும் மலைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான அனுமதி பெறாத வாழ்விடங்கள் அமைந்துள்ளன.
மார்ச் 30 அன்று வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித் துறையினால் வழங்கப்பட்ட ஒரு அரசாணையானது இது போன்ற வாழ்விடங்களில் உள்ள மனைகளானது “ஏழை மற்றும் அப்பாவி மக்களால்” வாங்கப் பட்டுள்ளது என்று கூறுகின்றது.
இந்த அமைவிடங்களை அவற்றின் முந்தையப் பயன்பாட்டிற்கு மீண்டும் பயன்படுத்த முடியாது.
இருப்பினும், இந்த அரசாணையானது யானைப் பெருவழித் தடங்கள் மற்றும் சில பகுதிகளின் கீழ் வராத பகுதிகளில் உள்ள அனுமதி பெறாத அமைவிடங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.
இந்த அரசாணையானது குடியிருப்புக் கட்டமைப்புகளுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த ஆணையானது வணிக ரீதியான கட்டமைப்புகளுக்குப் பயனளிக்காது.
மாநில அரசானது அனைத்து யானைப் பெருவழித் தடங்களை இனிமேல் தான் அறிவிக்க இருக்கின்றது. இது வனவிலங்குச் சரணாலயங்களைச் சுற்றி இடைமுகப் பகுதிகளை (Buffer Zones) அறிவிக்க இருக்கின்றது.