TNPSC Thervupettagam

மல்யுத்தம் - வினேஷ் போகாட்

September 22 , 2019 1765 days 605 0
  • கஜகஸ்தானின் நூர் - சுல்தானில் நடைபெற்ற மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வினேஷ் போகாட் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இவர் 53 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் இரண்டு முறை உலக வெண்கலப் பதக்கம் வென்ற கிரேக்கத்தைச் சேர்ந்த மரியா ப்ரெவோலராகியைத்  தோற்கடித்தார்.
  • சிறப்புமிக்க இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற நான்காவது இந்தியப்  பெண் மல்யுத்த வீரர் இவர் மட்டுமே ஆவார்.
  • இவர் காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
  • இந்த வெற்றியின் மூலம் இவர் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும்  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்