TNPSC Thervupettagam

மல்லிகா சீனிவாசன் – PESB வாரியத்தின் தலைவர்

April 6 , 2021 1329 days 718 0
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது பத்மஸ்ரீ மல்லிகா சீனிவாசனை பொதுத் துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் (Public enterprises Selection Board - PESB)  தலைவராக நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இவர் டிராக்டர்கள் மற்றும் வேளாண் கருவிகள் (TAFE - Tractors and Farm Equipment)) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.
  • TAFE நிறுவனமானது இந்திய அளவில் 2வது மற்றும் உலகின் மூன்றாவது அளவில் டிராக்டர்களை உற்பத்தி செய்யும்  ஒரு பெரிய நிறுவனமாகும்.
  • மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் (CPSEs) உயர்நிர்வாகப் பதவிகளை நியமிக்கும் பொறுப்பு பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்திடம் உள்ளது.

குறிப்பு

  • PESB வாரியத்தின் தலைவராக ஒரு தனியார் துறை நிபுணர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
  • இவர் PESB வாரியத்தின் தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு அல்லது 65 வயது எட்டும் வரை அந்தப் பதவியிலிருப்பார்.
  • இதற்கு முன்னாள் அப்பதவியிலிருந்த முன்னாள் நிதிச் செயலாளர் ராஜீவ் குமாருக்குப் பிறகு இவர் இப்பொறுப்பினை ஏற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்