TNPSC Thervupettagam

மழைக்காலக் கூட்டத்தொடர் 2023

August 16 , 2023 341 days 213 0
  • சமீபத்தில் நடந்து முடிந்த மழைக் கால கூட்டத்தொடரில் மக்களவையானது அதன் திட்டமிடப்பட்ட நேரத்தில் 43 சதவீதமும் மற்றும் மாநிலங்களவை 55 சதவீதமும் மட்டுமே இயங்கியுள்ளன.
  • ஆனால் 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து சட்டமியற்றும் செயல்பாடுகள் அதிகமாகவே பதிவாகியுள்ளது.
  • கீழவையில் சுமார் 44 மணி 15 நிமிடங்கள் நீடித்த 17 அமர்வுகள் நடைபெற்றது.
  • நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஆனது 19 மணி நேரம் 59 நிமிடங்கள் நீடித்தது.
  • இந்தக் கூட்டத் தொடரில் இருபத்து மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
  • பெரும்பாலான மசோதாக்கள் ஒரு சிறிய அளவு ஆய்வுக்கு மட்டுமே உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப் பட்டன.
  • இந்தக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களில் சுமார் 56% இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டன.
  • சராசரியாக, இந்தக் கூட்டத் தொடரில் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு மசோதா எட்டு நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டது.
  • அறிமுகப் படுத்தப் பட்ட மொத்த மசோதாக்களில், மூன்று மசோதாக்கள் பாராளுமன்ற குழுக்களுக்கு மதிப்பீட்டிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  • மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட 17% மசோதாக்கள் பாராளுமன்ற குழுக்களுக்கு மதிப்பீட்டிற்காக அனுப்பப்பட்டுள்ளன.
  • கடந்த மூன்று மக்களவை கூட்டத்தொடருடன் ஒப்பிடுகையில் இது குறைவு ஆகும்.
  • இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 23 மசோதாக்களில், ஏழு மசோதாக்கள் பாராளுமன்ற நிலைக் குழுவால் ஆய்வு செய்யப் பட்டுள்ளன.
  • தேசிய செவிலியர் மற்றும் மருத்துவத் தாதியர் ஆணையம் மற்றும் தேசிய பல் மருத்துவ ஆணையம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான மசோதாக்கள் மூன்று நிமிடங்களுக்குள் மக்களவையில் விவாதிக்கப்பட்டு ஒரு சேர நிறைவேற்றப் பட்டன.
  • மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் ஒருங்கிணைந்தச் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதாக்கள் மக்களவையில் இரண்டு நிமிடங்களுக்குள் ஒரு சேர நிறைவேற்றப் பட்டன.
  • மாநிலங்களவை தொடர்ச்சியாக அடுத்தடுத்த மூன்று நாட்களில் 10 மசோதாக்களை நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்