இந்தோனேசியாவின் அதி தீவிரமான செயல்பாட்டில் உள்ள எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் இபு சமீபத்தில் வெடித்தது.
மவுண்ட் இபு என்பது தீவிரமான வெடிப்பு நிகழ்வுகளுக்கான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டுள்ளது என்பதோடு 2023 ஆம் ஆண்டில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட முறை வெடித்துள்ளது.
அந்நாட்டில் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்துகின்ற மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையிலான 127 செயல்பாட்டில் உள்ள எரிமலைகள் உள்ளன.