இங்கிலாந்தின் மிக உயரமான மலையென கருதப்பட்டு வந்த மவுண்ட் ஜேக்சனை காட்டிலும் 400 மீட்டர் அதிகமான உயரம் கொண்டு இங்கிலாந்தின் மிக உயரமான மலையாக மவுண்ட் ஹோப் உள்ளதென இங்கிலாந்து செயற்கைக்கோளின் புதிய தகவல் தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.
அண்மையில் பிரிட்டனின் அட்லாண்டிக் பிராந்தியப் பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் ஹோப் மலையின் உயரம் மறு உயர கணக்கீடு செய்யப்பட்டதில் முந்தைய கணக்கீட்டை விட 377 மீட்டர் அதிகமான உயரமுடையதாக கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தத்தில் 3239 மீட்டர் உயரமுடைய மவுண்ட் ஹோப் மலையானது தற்போதைய உயரமான மலையாக கருதப்படும் மவுண்ட் ஜேக்சன் மலையை விட உயரமுடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.