நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர், ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க், சர்ச்சைக்குரிய ஒப்பந்தக் கோட்பாடுகள் மசோதாவிற்கு எதிராக குரல் கொடுத்து உள்ளார்.
அவர் அவை அமர்வின் போது அவர்களின் பாரம்பரிய மவோரி ஹக்கா என்ற ஒரு நடனத்தினையும் நிகழ்த்தினார்.
மவோரி ஹக்கா என்பது நியூசிலாந்தின் உள்ளார்ந்த கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு பாரம்பரிய நிகழ்ச்சியாகும்.
இது அதன் மிக சக்திவாய்ந்த ஆற்றல் தேவைப்படுதல், கடுமையான முகபாவனைகள் (புகானா) மற்றும் முத்திரை, கை சைகைகள் மற்றும் மந்திர உபசரிப்பு போன்ற உடல் அசைவுகளுக்கு பெயர் பெற்றது.
ஹக்கா என்பது ஒரு பழங்குடியினரின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகள் குறித்த பல கதைகளுடன் ஒவ்வொரு பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடும்.
ஒவ்வொன்றும் அதன் பெரும் தனித்துவமான நோக்கத்துடன் கூடிய பல்வேறு ஹக்கா வடிவங்கள் உள்ளன:
பெருபெரு: வலிமையை வெளிக்காட்டுவதற்காக வேண்டி போர் ஆயுதங்களைக் கொண்டு நிகழ்த்தப் படும் போர் முறை ஹக்கா.
கராஹூ: போர் வீரர்களின் தயார்நிலையைச் சோதிக்கும் ஒரு பகுதியளவு போர் சார்ந்த நடனம்.
ஹகா துய் வேவே: மகிழ்ச்சி அல்லது கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் போரற்ற ஹக்கா.
கா மேட்டெ: தலைவர் எதிரியின் பிடியிலிருந்து தப்பித்த ஒர் கதையையும், பின்னர் அவர் ஒரு பெரிய மவோரி தலைவராக உருவெடுத்ததையும் கூறுதல்.