மாசுபடுத்தப்பட்ட நதிகள் – மத்திய கண்காணிப்புக் குழு
April 19 , 2019 2049 days 711 0
தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது நாடு முழுவதும் பரவியுள்ள 350 நதிப் படுகைகளை தூய்மையற்ற நிலையிலிருந்து விடுவிப்பதற்காக ஒரு தேசிய அளவிலான திட்டத்தைத் தயாரித்துச் செயல்படுத்துவதற்காக ஒரு மத்திய கண்காணிப்புக் குழுவினை அமைத்து இருக்கின்றது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒரு மதிப்பீட்டின்படி அதிமுக்கிய மாசுபாடு அடைந்த பகுதிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாகும்.
மிதி நதி – போவாய் முதல் தாராவி வரை
கோதாவரி – சோமேஷ்வர் முதல் ரஹேத் வரை
சபர்மதி – கேரோஜ் முதல் வவுதா வரை
ஹிண்டோன் – சஹரன்பூர் முதல் காசியாபாத் வரை
பின்னணி
1990 ஆம் ஆண்டுகள் முதல் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உயிரியல் ஆக்சிஜன் தேவையை (Biochemical Oxygen Demand) முதன்மையாக அளவிடுவதன் மூலம் நதிகளின் தரத்தைக் கண்காணித்திட ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கின்றது.
உயிர்வேதியியல் ஆக்சிஜன் தேவை – நீரில் நிறைந்துள்ள உயிர்மப் பொருள்களை உடைத்திட உயிர்வளி வேண்டுகின்ற உயிரினங்களுக்குத் தேவைப்படுகின்ற கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவு.
அதிகப்படியான உயிர்வேதியியல் ஆக்சிஜன் தேவை அளவானது நதி மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் குறிப்பிடுகின்றது.