TNPSC Thervupettagam

மாடுகளின் மூளைக்கோளாறு நோய் பாதிப்பு

February 26 , 2023 640 days 276 0
  • வட மாகாணமான பாராவில் மாடுகளின் மூளைக்கோளாறு நோய்ப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப் பட்டதை அடுத்து, சீனாவிற்கு மேற்கொள்ளப்படும் மாட்டிறைச்சி ஏற்றுமதியைப் பிரேசில் நிறுத்தியுள்ளது.
  • இந்த நோயானது, கால்நடை மூளைச் செல் மிருதுவாக்க நோய் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது ஒரு பரவக்கூடிய, மெல்ல மெல்ல அதிகரிக்கக்கூடிய, மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, ஒரு மிக ஆபத்தான நோயாகும்.
  • இளம் பருவ கால்நடைகளின் மத்திய நரம்பு மண்டலத்தினைப் பாதிக்கிறது.
  • ப்ரியான் எனப்படும் புரதத்தில் ஏற்படும் ஒரு தொற்று காரணமாக இத்தகைய குணப் படுத்த முடியாத நோய் ஏற்படுகிறது.
  • அமெரிக்கா, சீனா, எகிப்து, ஹாங்காங், சிலி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.
  • மாட்டிறைச்சியினை ஏற்றுமதி செய்வதில் உலகளவில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்