அசாம் மாநில அரசானது, உணவகங்கள், உணவு விடுதிகள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி பரிமாறுவதற்கும் சாப்பிடுவதற்கும் மாநிலம் முழுவதும் தடை விதித்து உள்ளது.
அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பது சட்டவிரோதமானது அல்ல.
ஆனால் 2021 ஆம் ஆண்டின் அசாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்டம் ஆனது, அந்த மாநிலத்தில் அனைத்துக் கால்நடைகளின் இடமாற்றம் மற்றும் படுகொலை மற்றும் மாட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சிப் பொருட்களின் விற்பனை ஆகியவற்றினை ஒழுங்குபடுத்துகிறது.
இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலும், கோவில் அல்லது சத்திரத்தின் (வைணவ மடாலயம்) ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிலும் கால்நடைகளைக் கொல்வதையும், மாட்டிறைச்சி விற்பனை செய்வதை தடுப்பதையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது.
இம்மசோதாவின் விதிகளை மீறினால், மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப் படும்.