பாதிக்கப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை மேற்பார்வையிடவும், அதன் கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தவும் வேண்டி சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
இந்த மாநிலம் முழுவதிலும் ஒவ்வொரு பள்ளியிலும் புதிதான மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (SSAC) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர் நலன் தொடர்பான பிரச்சினைகள் அல்லது புகார்களைத் தீர்ப்பதற்கு SSAC குழுக்கள் மாதந்தோறும் கூடும்.
பள்ளிக் கல்வித் துறையானது கட்டணமில்லா உதவி எண்களை - 14417 மற்றும் 1098 – பாடப் புத்தகங்களின் பின் அட்டைகளில் பதிப்பது என்பது தற்போது மேற்கொள்ளப் பட்ட பல்வேறு முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும்.
இந்த எண்கள் ஆனது மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் அல்லது பிற பாதுகாப்பற்றச் செயல்களின் சம்பவங்களைப் பெயர் தெரிவிக்காமல் புகாரளிக்க உதவும்.
மாணவர்கள் தங்களின் குறைகளை வெகு இரகசியமாகச் சமர்ப்பிக்கும் வகையில் - மாணவர் மனசு என்று பெயரிடப்பட்ட சில புகார் பெட்டிகளை நிறுவவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.