TNPSC Thervupettagam

மாணவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள்

November 15 , 2024 7 days 65 0
  • பாதிக்கப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை மேற்பார்வையிடவும், அதன் கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தவும் வேண்டி சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
  • இந்த மாநிலம் முழுவதிலும் ஒவ்வொரு பள்ளியிலும் புதிதான மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (SSAC) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  • மாணவர் நலன் தொடர்பான பிரச்சினைகள் அல்லது புகார்களைத் தீர்ப்பதற்கு SSAC குழுக்கள் மாதந்தோறும் கூடும்.
  • பள்ளிக் கல்வித் துறையானது கட்டணமில்லா உதவி எண்களை - 14417 மற்றும் 1098 – பாடப் புத்தகங்களின் பின் அட்டைகளில் பதிப்பது என்பது தற்போது மேற்கொள்ளப் பட்ட பல்வேறு முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும்.
  • இந்த எண்கள் ஆனது மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் அல்லது பிற பாதுகாப்பற்றச் செயல்களின் சம்பவங்களைப் பெயர் தெரிவிக்காமல் புகாரளிக்க உதவும்.
  • மாணவர்கள் தங்களின் குறைகளை வெகு இரகசியமாகச் சமர்ப்பிக்கும் வகையில் - மாணவர் மனசு என்று பெயரிடப்பட்ட சில புகார் பெட்டிகளை நிறுவவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்