தமிழ்நாடு மாநில அரசானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி என்ற அளவில் இலவச இணைய இணைப்புகளை (Data Card) வழங்க உள்ளது.
இது மாணவர்கள் இணையதள வகுப்புகளில் தங்கு தடையின்றி கலந்து கொள்ள வழிவகை செய்யும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை & அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஊக்கத் தொகை பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்களாவர்.
இந்த இணைய இணைப்புக் கருவிகள் தமிழ்நாடு மின்னணுக் கழகத்தினால் வழங்கப்பட உள்ளன.