December 10 , 2022
717 days
525
- சமீபத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் மாண்டஸ் எனும் புயல் உருவானது.
- இந்தப் புயலிற்கு ஐக்கிய அரபு அமீரகம் பெயர் வழங்கியது.
- அரபு மொழியில், இந்தச் சொல்லிற்கு 'புதையல் பெட்டி' என்று பொருள் ஆகும் என்பதோடு, இது 'மேன்-டஸ்' என்று உச்சரிக்கப்படுகிறது.
- இப்புயலானது டிசம்பர் 09 ஆம் தேதியன்று மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது.
- கடந்த 121 ஆண்டுகளில் (1891-2021) சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே 12 புயல்கள் கரையைக் கடந்துள்ளன.
- மாண்டஸ் இப்பகுதியில் கரையைக் கடக்கும் 13வது புயலாகும்.
Post Views:
525