மாதவிடாய் சுகாதார தினம் என்ற ஒரு வருடாந்திர விழிப்புணர்வுத் தினமானது மே மாதம் 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
இது சிறந்த மாதவிடாய் சுகாதார மேலாண்மையின் (menstrual hygiene management - MHM) முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
இது ஜெர்மனியில் உள்ள அரசு சாரா அமைப்பான வாஷ் யுனைடெட் (WASH United) என்ற அமைப்பால் 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இத்தினமானது MHMவிற்காக சர்வதேச, தேசிய மற்றும் உள்ளுர் அளவிலான கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு குரல் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.
1947 ஆம் ஆண்டு முதல் ஜப்பானின் தொழிலாளர் சட்டங்கள் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்புகளை அளிக்கின்றது.
இத்தினக் கொண்டாட்டத்தின் போது, தமிழ்நாடு அரசு சென்னையில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ரூ.5 மதிப்புடைய சுகாதாரத் துணிகள் விற்பனை இயந்திரத்தை நிறுவியுள்ளது.