ஒரே பாரதம் சிறந்த பாரதம் (Ek Bharat Shrestha Bharat-ஏக் பாரத் ஸ்ரேஸ்தா பாரத்) எனும் தொடக்கத்தின் பெயர் பாதகையின் கீழ் குஜராத் மாநிலத்தின் போர் பந்தர் மாவட்டத்திலுள்ள மாதவ்பூரில் மத்திய கலாச்சார அமைச்சகமானது முதன் முறையாக மாதவ்பூர் மேளாவை ஒருங்கிணைத்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளை குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளை பிற பகுதிகளுடன் கலாச்சார ரீதியாக ஒன்றுக்கொன்று நெருக்கமாக்குவதே இதன் நோக்கமாகும்.
இந்த வகையில் குஜராத் மாநிலத்தின் மாதவ்பூர் மேளாவானது அருணாச்சலப் பிரதேசத்தின் மிஷ்மி பழங்குடியினருடன் (Mishmi Tribe) தன் தொடர்பை பகிர்ந்து கொள்கின்றது.
மாதவ்பூர் மேளாவானது கலாச்சாரக் கண்காட்சியின் மூலம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. வழக்கமாக இம்மேளாவானது ராம நவமி (Ram Navami) அன்று தொடங்குகின்றது.