TNPSC Thervupettagam

மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் 2024

March 19 , 2024 122 days 895 0
  • இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, மார்ச் 16 ஆம் தேதியன்று மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் (MCC) அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 01 ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்யப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் 04 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட உள்ளது.
  • தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரச்சாரத்தை ஒழுங்குமுறைப் படுத்துவதற்காக தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்படும் பல்வேறு வழிகாட்டுதல்களின் தொகுப்பே மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் ஆகும்.
  • வாக்காளர்களினிடத்தில் கருத்துத் தாக்கத்தினை ஏற்படுத்தும் அல்லது வாக்கெடுப்பு செயல்முறையை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுப்பதன் மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
  • கேரளாவில் 1960 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதுதான் மாதிரி தேர்தல் நடத்தை விதி முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
  • அதன் வெற்றிகரமாகப் பின்பற்றலைத் தொடர்ந்து, 1962 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் இந்த விதிகளை நாடு முழுவதும் அறிமுகப் படுத்தியது.
  • 1991 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, மீண்டும் மீண்டும் நடைபெற்ற தேர்தல் விதி மீறுதல் மற்றும் ஊழல் நடைமுறைகள் காரணமாக மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மேலும் கடுமையாக அமல்படுத்துவதற்கு தேர்தல் குழு முடிவு செய்தது.
  • மாதிரி தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தவித சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை.
  • அதாவது, மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் ஒருவர் மீது எந்தவொரு சட்டத்தின் கீழும் வழக்கு தொடர முடியாது.
  • தேர்தல் ஆணையமானது, அதன் அமலாக்கத்திற்கு வேண்டி தார்மீக அனுமதி அல்லது தணிக்கையைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்