இந்திய ரிசர்வ் வங்கியானது (RB) மாநகராட்சி அமைப்புகளின் நிதி நிலை குறித்த அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் கருத்துரு, "Own Sources of Revenue Generation in Municipal Corporations: Opportunities and Challenges - மாநகராட்சிக் கழகங்கள் அதன் சொந்த வருவாயினை ஈட்டுவதற்கான மூலங்கள்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்" என்பதாகும்.
2023-24 ஆம் ஆண்டில் வசூலான மொத்த வருவாயில், சொத்து வரி, தண்ணீர் வரி, மின்சார வரி, கல்வி வரி மற்றும் பிற உள்ளாட்சி வரிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சொந்த வரி வருவாய் ஆனது 30 சதவீதமாக இருந்தது.
அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள்தொகையுடன், நகர்ப்புறங்களில் உயர்தர பொதுச் சேவைகளுக்கான தேவை வேகமாக வளர்ந்து வருகிறது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருவாய் வரவுகளின் உயர்வு ஆனது, 2022-23 ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாக இருந்தது (திருத்தப்பட்ட மதிப்பீடு) என்ற நிலையில் இது 2023-24 ஆம் ஆண்டில் 20.1 சதவீதம் ஆக அதிகரிக்கும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் கூடுதலாக மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் உள்ள மாநகராட்சிக் கழகங்களுக்காக (11,104 கோடி ரூபாய்) 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தொகை ஒதுக்கப்பட்டது.
டெல்லி, ஆந்திரப் பிரதேசம், இராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள மாநகராட்சிக் கழகங்களில் கூடுதலாக 100 கோடி ரூபாய் (தமிழ்நாடு) முதல் 687 கோடி ரூபாய் (டெல்லி) வரையில் ஒதுக்கப் பட்டு உள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் திரிபுரா, ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் உள்ள மாநகராட்சிக் கழகங்களில் உள்ள வருவாய் பற்றாக்குறைக்காக (-) 2 கோடி ரூபாய் (திரிபுரா) முதல் (-) 789 கோடி ரூபாய் (கேரளா) ஒதுக்கப் பட்டது.