தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிக் கழகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
பல்லாவரம், செம்பாக்கம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகிலமைந்த நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் பஞ்சாயத்துகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சிக் கழகமானது உருவாக்கப்படும்.
இந்த தரம் உயர்த்தும் நடவடிக்கையானது ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளின் பதவியில் இடையிடாது.
அவர்களின் பதவிக் காலம் முடியும் வரை அவர்கள் அந்தந்தப் பதவியிலிருப்பர்.