தமிழ்நாடு அரசு ஆனது, தமிழ்நாடு பொது நிதி கண்காணிப்பு அமைப்பை (TNPFTS) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது நடைமுறைகளை எளிமையாக்குதல், கருவூலம் முதல் கடைநிலைப் பயனர்கள் வரையிலான நிதி செயல்பாட்டினை முழுமையாகக் கண்காணித்தல் மற்றும் செலவினங்களை சீரமைத்தல் போன்றவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சுய சேவைத் தேவைகளை எளிதாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ இணைய தளத்தினையும் மற்றும் கைபேசி செயலியினையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தினை மிகவும் திறம்பட செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக மற்றொரு இணையதளம் மற்றும் கைபேசி செயலி தொடங்கப் பட்டுள்ளது.