TNPSC Thervupettagam

மாநில அரசின் மூலதனச் செலவினம் 2023-24

November 13 , 2023 250 days 236 0
  • 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் மூலதனச் செலவினம் சுமார் 31.7% அதிகரித்து 17,773.80 கோடி ரூபாயாக இருந்தது.
  • இது கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 13,499.24 கோடி ரூபாயாக இருந்தது.
  • முந்தைய ஆண்டில் 31.7% ஆக இருந்த  மாநிலங்களின் மூலதனச் செலவினமானது, 2023-24 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 190.3% வரை வளர்ச்சியடைந்தது.
  • 23 மாநிலங்களின் மொத்தச் செலவின மதிப்பான 2.62 லட்சம் கோடி ரூபாயில் பாதிக்கும் மேலான பங்கினை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொண்டுள்ளன.
  • மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 2024 ஆம் நிதியாண்டிற்கான தங்களின் வரவு-செலவுத் திட்ட இலக்கில் 40 சதவீதத்திற்கும் மேலான இலக்கினை எட்டியுள்ளன.
  • இருப்பினும், உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்கள் 30 சதவீதத்திற்கும் குறைவான இலக்குகளை மட்டுமே எட்ட முடிந்ததால், இது அந்தந்த மாநிலங்கள் அவற்றின் இலக்கை விட குறைவான வரம்பையே எட்டியதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்