மாநில அரசுகளின் கடன் பெறுவதற்கான உத்தரவாதங்கள் குறித்த வழிகாட்டுதல்கள்
February 12 , 2024 285 days 259 0
இந்திய ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட ஒரு பணிக்குழுவானது, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இது நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்களுக்கு (மாநில அரசுகளால்) ஒரே மாதிரியான அறிக்கையிடல் கட்டமைப்பையும், ஒரே மாதிரியான உத்தரவாத உச்சவரம்பையும் பரிந்துரைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இதன் செயலாக்கமானது "மாநில அரசுகளின் சிறந்த நிதி மேலாண்மையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது".
ஒரு ‘உத்தரவாதம்’ என்பது ஒரு மாநில அரசானது பணம் செலுத்துவதற்கும், முதலீட்டாளர்/கடன் வழங்குபவரைக் கடனாளி கடனைத் திருப்பிச் செலுத்ததால் ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்குமான ஒரு சட்டப்பூர்வக் கடமையாகும்.
இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் (1872) படி, இது "ஒரு மூன்றாம் தரப்பினர் கடனைத் திரும்பிச் செலுத்தாமல் தவறினால் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவது அல்லது கடன் பொறுப்பினை பூர்த்தி செய்தல்" என்ற ஒப்பந்தமாகும்.
முதன்மையாக, மாநில அளவில் மூன்று சூழ்நிலைகளில் உத்தரவாதங்கள் பயன்படுத்தப்படுகின்றன:
முதலாவதாக, இருதரப்பு அல்லது பலதரப்பு நிறுவனங்களிடமிருந்துப் பெறப்படும் (பொதுத் துறை நிறுவனங்களுக்கு) சலுகைக் கடன்களுக்கு இறையாண்மை உத்தரவாதம் முன்நிபந்தனையாக இருக்கும்;
இரண்டாவதாக, முக்கியமான சமூக மற்றும் பொருளாதார நலன்களை வழங்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் கொண்ட பல்வேறு திட்டங்கள் அல்லது செயல்பாடுகளின் நம்பகத் தன்மையை மேம்படுத்துதல்; மற்றும்
கடைசியாக, பொதுத் துறை நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டிக் கட்டணங்களில் அல்லது மிகவும் சாதகமான விதிமுறைகளில் நிதி வளங்களைத் திரட்டுவதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.