மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளுக்கு இணைய சேவை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 17,221 பள்ளிகளுக்கு ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இணைய சேவை வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள 6,223 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 5,913 இணைய சேவை இணைப்பினைப் பெற்றுள்ளன.
6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,799 பள்ளிகளுக்கு இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை, மொத்தம் 24,338 பள்ளிகளில் சுமார் 10,620 பள்ளிகளுக்கு இணைய சேவை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.