முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அளவிலான திஷா என்ற குழுவானது மத்திய அரசின் நிதி உதவியினைப் பெறும் திட்டங்களின் அமலாக்கத்தினைக் கண்காணிக்கும்.
அந்த திட்டங்களாவன; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா, தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா போன்றவையாகும்.
ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் K.R. பெரியகருப்பன் இக்குழுவின் துணைத் தலைவராக செயல்படுவார்.