TNPSC Thervupettagam

மாநில உணவுக்குழு - தமிழ்நாடு

March 3 , 2018 2329 days 857 0
  • இந்திய ஆட்சிப் பணி அதிகாரியானவாசுகி தலைமையில் 6 பேர் கொண்ட மாநில உணவுக்குழுவை (state Food Commission) தமிழக அரசு அமைத்துள்ளது.
  • மாநிலத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை (National Food Security Act-NFSA) அமல்படுத்த முடிவு செய்து ஓராண்டிற்குப் பிறகு தற்போது இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 16-ன் படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிப்பதற்கும், மதிப்பிடுவதற்கும் மாநில அரசுகள் கண்டிப்பாக மாநில உணவுக் குழுவை அமைக்க வேண்டும்.
  • தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி, இக்குழுவானது-
    • உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களின் திறன்பட்ட அமலாக்கத்திற்காக மாநில அரசிற்கு  அறிவுரை வழங்கும்.
    • மாநிலங்களின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அமலாக்கத்தினை மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு செய்யும்.
    • திட்டத்தினுடைய அமலாக்கத்தின் போது ஏற்படும் விதிமுறை மீறல்களால் உண்டாகும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்.
  • இத்திட்டத்தினுடைய அமலாக்கத்தின் போது எழுகின்ற விதிமீறல்களை தானாக முன் வந்து விசாரிக்கவோ (Suo moto) அல்லது புகாரின் பெயரில் விசாரிக்கவோ இக்குழுவிற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
  • ஓர் சிவில் நீதிமன்றத்திற்கு உள்ள அத்தனை அதிகாரங்களும் இக்குழுவிற்கு உள்ளது.
  • மாநிலத்தின் மொத்த2 கோடி நுகர்வோருள், 3.6 கோடி மக்கள் அதாவது 50.55 சதவீதத்தினர் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்களைப் பெறத் தகுதியுடையோராவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்