நவம்பர் 01 ஆம் தேதியானது ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய எட்டு இந்திய மாநிலங்களின் மாநில உருவாக்க தினத்தினைக் குறிக்கிறது.
தமிழ்நாடு மாநிலமானது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மதராஸ் மாநிலம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
இது பின்னர் 1967 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் (18 ஆம் தேதி) தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப் பட்டது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலமானது, ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் ஆனது 2000 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று உருவாக்கப் பட்டது.
ஹரியானா மாநிலம் ஆனது கிழக்கு பஞ்சாப் மாநிலத்திலிருந்து மொழிவாரியாக பிரிக்கப் பட்டு 1966 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று ஒரு மாநிலமாக உருவாக்கப் பட்டது.
கர்நாடகா 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மைசூர் மாநிலமாக உருவாக்கப்பட்டது.
இது பின்னர் 1973 ஆம் ஆண்டில் கர்நாடகா என மறுபெயரிடப்பட்டது.
மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று கேரளா மாநிலம் உருவாக்கப்பட்டது.
மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மத்தியப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது.
பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின் (1966) கீழ் பஞ்சாப் மாநிலம் உருவானதைக் குறிக்கும் வகையில் நவம்பர் 01 ஆம் தேதியன்று அம்மாநிலம் முழுவதும் பஞ்சாப் தினம் கொண்டாடப்படுகிறது.