- எரிசக்தித் திறன் அமைப்பானது (Bureau of Energy Efficiency - BEE) 2019 ஆம் ஆண்டிற்கான மாநில எரிசக்தித் திறன் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
- நிலக்கரி, மின்சாரம், எரிவாயு மற்றும் எண்ணெய் போன்ற அடிப்படை எரிசக்தித் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த அறிக்கையானது தயாரிக்கப்பட்டுள்ளது.
- 97 குறிகாட்டிகளின் அடிப்படையில் 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றில் எரிசக்தித் திறன் முன்னெடுப்புகளின் செயல்பாடுகளை இந்த அறிக்கை ஆய்வு செய்துள்ளது.
- இந்த அறிக்கையின் படி, கர்நாடகா, இமாசலப் பிரதேசம், ஹரியானா மற்றும் புதுச்சேரி ஆகியவை சிறப்பாகச் செயல்படும் (சாதனையாளர் பிரிவு) மாநிலங்களாக /ஒன்றியப் பிரதேசங்களாக விளங்குகின்றன.
- மணிப்பூர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவை மிகக் குறைந்த செயல்திறன் (இலக்கை அடைய வேண்டிய பிரிவு) கொண்டவையாக விளங்குகின்றன.
- இந்த ஆண்டில், BEE ஆனது அதன் குறிகாட்டிகளில் ஒன்றாக எரிசக்திப் பாதுகாப்புக் கட்டிடக் குறியீட்டையும் சேர்த்துள்ளது.
எரிசக்தித் திறன் அமைப்பு (BEE)
- BEE என்பது மத்திய மின்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
- இது இந்தியப் பொருளாதாரத்தில் எரிசக்தியின் தேவையைக் குறைப்பதற்கான முதன்மை நோக்கத்துடன் கொள்கைகள் மற்றும் உத்திகளை மேம்படுத்துவதற்கு உதவுகின்றது.