ஒடிசா மாநிலத்தில் சட்ட மேலவையை அமைப்பதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் (State Assembly) நிறைவேற்றப்பட்டது.
மாநில சட்ட மேலவையை அமைப்பதற்கு பாராளுமன்ற ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு இத்தீர்மானம் அனுப்பி வைக்கப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட சட்ட மேலவையில் 49 உறுப்பினர்கள் இருப்பர். இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநில சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியாகும்.
ஒடிசா மாநில அரசானது மற்ற மாநிலங்களில் உள்ள சட்ட மேலவைகளை ஆய்வு செய்து தனது மாநிலத்திற்கு ஒரு சட்ட மேலவையை உருவாக்குவதற்கு 2015 ஆம் ஆண்டு ஒரு குழுவை அமைத்தது. இந்தியாவின் ஆண்களின் எழுத்தறிவு வீதம் 80.9 ஆகும். பெண்களின் எழுத்தறிவு வீதம் 62.8 ஆகும்.