மாநில தலைமை காவல்துறை அதிகாரியை (DGP) தேர்ந்தெடுத்திட மாநில பாதுகாப்பு ஆணையத்தை அமைப்பதற்காக பஞ்சாப் போலீஸ் (திருத்த மசோதா) 2018 என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா பஞ்சாப் போலீஸ் சட்டம், 2007 என்ற சட்டத்தை திருத்தியுள்ளது.
இந்த மாநிலப் பாதுகாப்பு ஆணையமானது
முதல்வர் - தலைவராக
உள்துறை அமைச்சர் - துணைத் தலைவராக
எதிர்க்கட்சித் தலைவர்
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி
தலைமைச் செயலாளர்
மாநில அரசின் உள்துறை விவகாரம் மற்றும் நீதித்துறைக்கான முதன்மைச் செயலாளர்.