TNPSC Thervupettagam

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிகத் தலைவர்

February 11 , 2020 1629 days 2310 0
  • ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியான D. ஜெயச்சந்திரன் என்பவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் (SHRC - State Human Rights Commission) தற்காலிகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின்  இரண்டு உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.

தமிழ்நாடு SHRC பற்றி

  • தமிழ்நாட்டில் 17.4.1997 அன்று தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமானது ஏற்படுத்தப் பட்டது.
  • இது மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993ன் பிரிவு 21ன் கீழ் ஏற்படுத்தப் பட்டது.
  • மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2019ன் படி, SHRCன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 70 வயது  பூர்த்தியாகும் வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் நீடிப்பார்கள்.
  • உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி/நீதிபதியாக இருந்த ஒருவர் SHRCன் தலைவராக நியமிக்கப்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்