TNPSC Thervupettagam

மாநில மீன் – சிக்கிம்

September 22 , 2021 1068 days 545 0
  • சிக்கிம் அரசானது உள்ளூரில் கட்லி என அறியப்படும் கூப்பர் மஹ்சீர்என்ற மீனை மாநில மீனாக அறிவித்துள்ளது.
  • இந்த மீனின் அறிவியல் பெயர் நியோலிசோசிலஸ் ஹெக்ஸகோனோலெபிஸ் (Neolissochilus hexagonolepis) என்பதாகும்.
  • கட்லி மீனின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், அதன் வளங்காப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் வேண்டி இந்த முடிவானது மேற் கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்த மீன் சிக்கிம் மாநிலத்தில் அதிக சந்தை மதிப்பினைக் கொண்டது.
  • இது அம்மாநில மக்களால் அதிகம் விரும்பப்படும் மீன் வகையாகும்.
  • மேலும் அந்த மாநிலத்தின் நீர்த்தேக்கங்களில் மீன்பிடிப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப் படும் எனவும் சிக்கிம் அரசு அறிவித்துள்ளது.
  • அந்த நீர்த்தேக்கங்கள் வடக்கு சிக்கிமில் சுங்தாங், மேற்கு சிக்கிமில் லெஷெப் மற்றும் கிழக்கு சிக்கிமில் மக்சு மற்றும் ரோரத்தாங் ஆகிய இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்